RSS

அறிவே உயர்வு தரும்
* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக்கெல்லாம் தலையாய பிழை அறிவு நூல்களைக் கற்காமல் இருப்பதே ஆகும்.
அதனால், நல்ல நூல்களை வாசிப்பதை அன்றாடப்பணியாக்கிக் கொள்ளுங்கள்.


* மனிதனை உயர்த்துவது பணமன்று; பதவியன்று; குலமன்று; பருமன் அன்று; உயரம் அன்று; அறிவு ஒன்றுதான்
மனிதனை உயர்த்த வல்லது.


* ஆண்டவனுக்கு பணக்காரன், இல்லாதவன் என்ற பேதங்கள் சிறிதும் கிடையாது. இறைவனின் சன்னதியில்

அனைவரும் சமம் என்ற உணர்வோடு வழிபாடு செய்யுங்கள்.

* குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தினமும் ஒன்றுகூடி, காலை அல்லது மாலை நேரத்தில் வழிபாடு செய்வதால்
குடும்பத்தில் அமைதியும், அருளும் தழைக்கும்.


* இனிமையான சொற்களைப் பேசுபவர்களுக்கு உலகில் எந்தத் துன்பமும் இல்லை. எமவாதனை உண்டாகாது.
அவர் இருக்கும் இடத்தில் அருள் துலங்கும்.


* நாம் எந்தப் பாவத்தைச் செய்தாலும் தெய்வத்திடம் மன்னிப்பு பெற்று விடலாம். ஆனால், நன்றி மறந்த பாவத்தை
தெய்வம் ஒருபோதும் மன்னிக்காது.


* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம் கொடுத்தால் போனது போனது தான். ஒரு வேளை திரும்பி வந்தாலும்
அது தன் தன்மையில் சிதையாமல் இருப்பது என்பது சந்தேகம்தான்.


- கிருபானந்த வாரியார். 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக