முயற்சியைக் கைவிடாதீர்

* ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது.
அதை வெளிக்கொண்டுவருவது தான் வாழ்வின் லட்சியம்.
இதற்கு அகவாழ்விலும், புறவாழ்விலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

* பசியில் உழன்று கொண்டிருப்பவனிடம் தத்துவம் பேசுவது அவனை அவமதிக்கும் செயலாகும்.
அவனுக்கு உணவளித்த பின்னரே, ஆன்மிக போதனையை தொடங்க வேண்டும்.

* மனமும் செயலும் ஒருமித்து நிற்கும் ஒருவன் எச்செயலைச் செய்தாலும்
அதில் அவன் வெற்றி பெறுகிறான். அரிய செயல்கள் யாவுமே பலத்த இடையூறுகளுக்குப் பின்னரே
கைகூடுகின்றன. ஆகையால், ஆண்மையோடு விடாது முயற்சி செய்யுங்கள்.

* ஒருவன் நெருப்பின் நடுவில் கூட துயில் கொள்ள முடியும்.
ஆனால், வறுமையின் பிடியில் துயில் கொள்ள முடியாது.

* தெய்வீகத் தன்மை இல்லாமல் பெறுகின்ற மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும்
மனிதனை சாத்தான்களாக்கி ஆணவத்தில் தள்ளி விடுகின்றன.

* பெரியவர்கள் உலகில் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள்.
அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கிறது.


-விவேகானந்தர்